Thiravugal

*திறவுகள்*
-ஒரு முற்போக்குக்கான பாதை......
வாழ்க்கை என்றுமே சிறந்த அனுபவங்களால் மென்மேலும் அழகாகிறது. அத்தகைய அழகான வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் இலக்கு என்பது நிச்சயமாய் இருக்கும். சிலர் அந்த இலக்குகளை தத்தம் திறமைகள் மூலம் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால்,தங்களிடம் அளப்பரிய திறமைகள் இருந்தும் அதை நிகழ் உலகத்திற்கு வெளிக்கொண்டுவர இயலாமல் அல்லல் படும் எண்ணற்ற இளைஞர்கள் இன்றும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அத்தகு துடிப்புள்ள இளைஞர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களது திறமைகளுக்கு மதிப்பளித்து அவர்களை ஊக்குவித்து அவர்களின் வருங்கால முன்னேற்றத்திற்கான துறைசார்ந்த பயிற்சிகளை அளித்து சாதனை மனிதர்களாய் மாற்ற வழிநடத்தச் செய்யும் ஒரு முற்போக்குக்கான பாதையே இந்த *திறவுகள்*

"துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்."
- திருவள்ளுவர்.


என்ற பொதுமறை தந்த ஐயன் வள்ளுவரின் கூற்றுப்படி சிறந்த துணையாய் எப்போதும் உங்களோடு பயணித்து உங்கள் கரங்களுக்கு மென்மேலும் வலிமை சேர்க்கும் நம் *'திறவுகள்'.* திறமைகள் இருக்கும் உறவுகளே! திறவுகளால் என்றும் திருப்பங்களே! கவலைகளை கொஞ்சம் களையுங்களே! பயணிப்போம் ஒன்றாய் இணையுங்களே! மரு.ஜெஃப் வால்டர் ராஜதுரை (எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்) அவர்களின் வழிகாட்டுதல்படி இந்த தொடக்க துணுக்குகளை எழுதியது அவரது மாணவர் நெ.குணாளன்.




English Translation


*Thiravugal*
-For a Progressive Path
Life is at its best with better experiences. Every human being has a goal in his/her life. Some people do achieve those goals with their own talents. But there are countless youth who are not able to make it out to the real world, despite their tremendous abilities. *THIRAVUGAL* is a progressive pathway which seeks out for the talented youth,adornes them with skills, motivates them, and provides them adequate training in their own field thus gifting them a transformation.

*Couplet Explanation*

The efficacy of support will yield (only) wealth;
(but) the efficacy of action will yield all that is desired.
-Thiruvalluvar.

As per Valluvar's words, *Thiravugal* will be the best companion to you. It will always travel with you and add more strength to your arms.
As per the directions of Dr. Jeff Walter Rajadurai(Orthopaedic Surgeon), his student N. Gunalan compiled this.